17 February 2026

logo

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை



2026 டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. கருதுகின்றது. 

மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

 தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ஐ.சி.சி. க்கு இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது. 

(colombotimes.lk)