18 May 2026

logo

கடலில் விழுந்த விமானம் - அனைவரும் உயிருடன் மீட்பு



புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த மீட்புப் பணிக்காக 5 மணிநேரத்திற்கும் அதிக காலம் செலவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டரின் எரிபொருள் தீர இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த அனைவரையும் மீட்க முடிந்தமை ஒரு அதிசயம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் எலிசபெத் பியோவடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'இவர்கள் அனைவரும் உயிர் தப்பியிருப்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

(colombotimes.lk)