26 July 2025

logo

இந்தியாவில் 04 சிறுவர்கள் உயிரிழப்பு



இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை  கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜலவார் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை  கட்டிடமே  இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைத் தவிர, சுமார் 40 சிறுவர்கள் அங்கு இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(colombotimes.lk)