ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியதால், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் சுமார் 6% அதிகரித்துள்ளன.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து பதிவான மிக மோசமான மோதல் சூழல் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 6.79 அமெரிக்க டாலர் அல்லது 6.3% அதிகரித்து, 114.96 டாலராக உயர்ந்ததுள்ளது.
(colombotimes.lk)
