2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)
