16 April 2025

INTERNATIONAL
POLITICAL


இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்



மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று (03) 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் மையம்  தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் தீவின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.


(colombotimes.lk)