இன்று (07) முதல் கல்கிஸ்ஸ - காங்கேசன்துறை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை இந்த ரயில் வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக திபணைக்களத்தின் துணை பொது மேலாளர் என்.ஜே. இந்திபோலேஜ் தெரிவித்தார்.
இந்த ரயில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 05.15 மணிக்கு கல்கிஸ்ஸாவிலிருந்து பயணத்தைத் தொடங்கி மதியம் 12.13 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை அடையும்.
அதேபோல், காங்கேசன்துறையில் இருந்து மதியம் 01.50 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் ரயில் இரவு 08.58 மணிக்கு கல்கிஸ்ஸாவை அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
(colombotimes.lk)