23 December 2024


குறைந்த பந்துகளில் அரைசதம்- குசல் ஜனித்தின் அதிரடி



2024 அபுதாபி T10 போட்டியில் நியூயோர்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் நோர்தே வொரியர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டிகள் நேற்று (28) இடம்பெற்றன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூயோர்க் ஸ்டிரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும், அந்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  நார்த் வொரியர்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

 15 பந்துகளில் அவர் பெற்றுக்கொண்ட இந்த ஓட்டமே  இந்த போட்டியின் அதிவேக அரை சதமாக பதிவு செய்யப்பட்டது.

(colombotimes.lk)