மே தின மேடையில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அதன் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(colombotimes.lk)
