மோட்டார் சைக்கிள்களைத் திருடி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் அவர் 7 மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளதுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கம்பஹா மருத்துவமனையின் பிணவறையில் பணியாற்றியுள்ளதுடன் சந்தேக நபருக்கு 42 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது
(colombotimes.lk)