பாராளுமன்ற தேர்தலைக் கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் இணையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ரஷ்யா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஆணைக்குழுவை சந்தித்து தமது அவதானிப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் நேற்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்து தமது கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(colombotimes.lk)