23 December 2024


ப்ரீ புக்கிங்கில் வேட்டையை ஆரம்பித்த கங்குவா



ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள படம் கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவை அடுத்து திஷா பதானி, பாபி தியோல் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், படம் வரும் நவம்பர் 14ம் திகதி 10,000 ஸ்கிரீன்களுக்கு மேல் வெளியாக இருக்கிறது.
 
வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டி வருகிறது. தற்போது முன்பதிவு மூலம் இப்படம் ரூ. 9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

(colombotimes.lk)