மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பி. என். டி.பெர்னாண்டோ இன்று (18) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு.கிளைவ் பொன்சேகா மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் பி. என். டி. திரு. பெர்னாண்டோ, நிதி, வங்கி மற்றும் உயர்கல்வித்துறையில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் என்பதுடன், களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் கற்கைகள் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது .
(colombotimes.lk)