22 May 2025


கெஹெலியவின் மகன் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இன்று (21) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்காகவே அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்

'ஊழல்' குற்றத்தைச் செய்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று புகார்கள் தொடர்பாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை அடுத்த மாதம் 3 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)