இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம், இரவு நேர கொள்கை வட்டி விகிதத்தை தற்போதைய மட்டமான 8.00% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது.
அது நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரப் போக்குகளை கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர், நாணயக் கொள்கை வாரியம் இந்த முடிவை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடுத்தர காலத்தில் பணவீக்கம் படிப்படியாக 5% இலக்கை அடைவதை உறுதி செய்வதையும், பொருளாதாரம் அதன் அதிகபட்ச திறனை அடைய உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)