22 December 2024


கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



கலிபோர்னியா மாகாணத்தில் கடலில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலத்தில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம்  உருவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் தாக்கம் காரணமாக கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்
தற்போது அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாவது நிலநடுக்கத்திற்கு பிறகு , மேலும் பல அதிர்வுகள் பதிவாகியுள்ளன, மேலும் மாநிலம் முழுவதும் சுமார் 10,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களினங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தற்போது மதிப்பிடப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(colombotimes.lk)