இந்த நாட்டில் 90% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
பாலின இடைவெளி குறியீட்டில் 146 நாடுகளில் இலங்கை 122வது இடத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது பாலினம், மதம், இனம் மற்றும் வயதை கடந்த ஒரு சமூக சவால் என்றும் ,பல்கலைக்கழக மாணவர்களில் 60% க்கும் அதிகமானோர் பெண்கள் என்றாலும், ஊதியம் பெறும் பணியாளர்களில் பெண்கள் 35% பேர் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
பெண்கள் வேலைவாய்ப்புகள் மூலம் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திறனைப் பெறுவதை உறுதி செய்வதற்கு ஒரு சரியான அமைப்பு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)