நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது பல்லேகல, தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 8 பேருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதன்படி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேஷ்பந்து தென்னகோன் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(colombotimes.lk)