2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அக்டோபர் 6, வரையான காலப்பகுதியில் கலால் திணைக்களம் 361 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளதாக பாராளுமன்றத்தின் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்திற்கே அதிகளவான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 110 எனவும் அவர் தெரிவித்துள்ளார்
தென் மாகாணத்திற்கு 48 உரிமங்களும், வட மாகாணத்திற்கு 32 உரிமங்களும், கிழக்கு மாகாணத்திற்கு 22 உரிமங்களும், மத்திய மாகாணத்திற்கு 45 உரிமங்களும், வட மத்திய மாகாணத்திற்கு 14 உரிமங்களும், வடமேற்கு மாகாணத்திற்கு 30 உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு தலா 30 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
(colombotimes.lk)