முட்டை விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டில் அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்கும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாய அமைச்சர் புரூக் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கோழிப்பண்ணைகளின் நிலைமையை மேம்படுத்தவும், இலவச ஆலோசனை சேவைகளை வழங்கவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதால், முட்டை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
(colombotimes.lk)