07 January 2025


அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம்



அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை அண்மித்திருக்கலாம் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

(colombotimes.lk)