முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபரை இந்த மாதம் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(colombotimes.lk)
