08 May 2026

logo

2,200 லீற்றர் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது



அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் ஹுங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட டீசல் கையிருப்பும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


(colombotimes.lk)