24 June 2026

logo

கொழும்பு - அவிசாவளை வீதியில் வௌ்ளம்



களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, பலுமஹர - கடுவெல புதிய கண்டி வீதி உடுப்பில பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இதன் காரணமாக அவ்வீதியூடான இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(colombotimes.lk)