அடுத்த 36 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் ஒரு அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழைப் பொழிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்த்துள்ளது.
(colombotimes.lk)
