01 February 2026

logo

ஜனாதிபதியின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு



இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின்சாரம், எரிபொருள், பெற்ரோலிய பொருட்கள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்து போன்றவற்றுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி வெளியிடப்பட்டுள்ளது.

(colombotimes.lk)