30 May 2026

logo

வெளிநாடுகளில் உள்ள 89 குற்றவாளிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்



நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகள் நேற்று (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(colombotimes.lk)