26 December 2024


உடனே போரை நிறுத்துங்கள்.. ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்



இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் இப்போது லெபனான் வரை நீண்டிருக்கிறது. லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று லெபனான் வலியுறுத்த ஆரம்பித்துள்ளது

தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு வலியுறுத்தியுள்ளது

(colombotimes.lk)