05 January 2025


டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியது



அமெரிக்காவில் டெஸ்லா ட்ரக் ஒன்று எரிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் வெடித்து சிதறியுள்ளது.

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில்,டொனால்டு டிரம்ப் ஹோட்டல் முன்பு, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தினால் பாரவூர்தி சாரதி உயிரிழந்துள்ளதுடன் 07 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த டிரக் கொலராடோவில் வாடகைக்கு எடுக்கப்பட்டு, வெடிப்பு சம்பவத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக ஹோட்டலுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 
(colombotimes.lk)