வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்
மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
(colombotimes.lk)