25 February 2026

logo

சோமாவதிய வீதியின் போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு



சோமாவதிய - சுங்காவில பிரதான வீதி தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்களை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மகாவலி கங்கை வான்பாய்ந்ததன் காரணமாக, இந்த வீதியில் திக்கலை பகுதியில் 35 ஆவது மற்றும் 37 ஆவது கிலோமீற்றர்களுக்கு இடைப்பட்ட பிரதேசம் சுமார் 2 1/2 அடி வரை தொடர்ந்தும் நீரினால் மூழ்கிக் காணப்படுகிறது. 

சோமாவதிய - சுங்காவில வீதியைப் பயன்படுத்தி சோமாவதிய புனித பூமிக்குச் செல்ல எதிர்பார்க்கும் பொதுமக்கள், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(colombotimes.lk)