12 March 2025

INTERNATIONAL
POLITICAL


பொலீஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்



பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்கள் தொடர்பாக இலங்கை பொலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு

(colombotimes.lk)