18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய் – வெள்ளை மாளிகை தகவல்



அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் நோய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(colombotimes.lk)