அம்பலங்கொட, பாலபிட்டியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 16 ரவைகள் மற்றும் 11 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாலபிட்டியாவைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நபரால் அவருக்கு அந்த கைத்துப்பாக்கி வழங்கப்பட்டதாகவும், அந்த சந்தேக நபர் முன்தினம் (03) இரவு அம்பலங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் அஹுங்கல்ல பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் லோக்கு பட்டி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் ஆதரவாளர்கள் எனத் தெரியவந்துள்ளதாகவும், குற்றம் புரிவதற்காக இந்தப் கைத்துப்பாக்கி அவர்களுக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அஹுங்கல்லா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
(colombotimes.lk)
