நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேச சபை ஊழியர் சம்பள அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் 22ஆம் திகை வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நேற்று (08) பிற்பகல் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் நடந்த ரூ. 10 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பொம்புவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும், வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேச சபையின் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(colombotimes.lk)