ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தின் (UNOPS) தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சார்ள்ஸ் காலானனுக்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் சுதந்திரமான சுகாதார சேவையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக சாள்ஸ் காலனன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
(colombotimes.lk)