08 May 2026

logo

மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு



குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்ததற்கும், அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியதற்கும், சமூக ஊடக நிறுவனமான மெட்டா 375 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என அமெரிக்காவில் உள்ள ஒரு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

New Mexico மாநிலத்தில் நடந்த ஆறு வார விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், மாநில அதிகாரிகள், சிறார்களை பாதுகாப்பதில் மெட்டா தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இந்த தீர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் ஒரு அமெரிக்க மாநிலம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வெற்றி பெற்ற முதல் சம்பவமாகும்.

(colombotimes.lk)