03 August 2025

logo
INTERNATIONAL
POLITICAL


இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு



உலகின் மிகவும் இயங்கும் நிலையில் உள்ள எரிமலையாக கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபியில் (Lewotobi) வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை சிகரங்களை கொண்ட இந்த எரிமலையின் லக்கிலக்கி பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெடிப்பின் தாக்கமாக சாம்பல்மிகு புகை வானில் 10 கிலோமீற்றர் உயரம் வரை பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, அபாயத்திற்குள்ளான பகுதிகளில் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தோனேசிய எரிமலை கண்காணிப்பு மையம், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, எரிமலையின் கீழ் பகுதியில் 6 முதல் 7 கிலோமீற்றருக்குள் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் கனமழை பெய்தால் எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு காரணமாக, மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த எரிமலை வெடிப்பு சமீபத்தில் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியிருந்தது. 

இதனால் பாலி தீவுக்கான சர்வதேச விமான சேவைகள் கடந்த ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் தாமதமாக சென்றதுடன் ரத்து செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(colombotimes.lk)