01 April 2025

INTERNATIONAL
POLITICAL


பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு




பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான 6000 ரூபா வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது

(colombotimes.lk)