05 December 2024


உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு



மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உலகின் மிகப் பெரிய தங்கக்  சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தங்க  சுரங்கம்  பூமிக்கு அடியில் சுமார் 03 கி.மீ ஆழத்தில் இருப்பதாகவும் , இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 60,000 பில்லியன் யுவான் என ஹுனான் மாகாணத்தின் புவியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

 
(colombotimes.lk)