சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, ரூ. 6.5 மில்லியன் மதிப்புள்ள 40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 32 மின்னணு சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப்பெட்டிகளுடன், இன்று காலை (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காலியில் வசிக்கும் 22 வயது தொழிலதிபர் ஆவார்.
சந்தேக நபரும், அவர் நாட்டிற்குள் கொண்டுவந்த அனைத்து சிகரெட்டுகளும் மேலதிக விசாரணைக்காக இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(colomnotimes.lk)
