24 June 2026

logo

கோரமான விபத்தில் இளைஞர் உயிரிழப்பு



நேற்று இரவு (01) முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் லொறி  நேருக்கு நேர் மோதியதில் கோரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள புனானி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, பின்னால் பயணித்த பெண் மற்றும் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்த மற்றும் வாழைச்சேனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)