26 December 2024


ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்.. இஸ்ரேல் அறிவிப்பு



லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை முதல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆயுதங்களை கடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உறுதி அளிப்பதோடு, அந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். அதுவரை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

(colombotimes.lk)