10 March 2025

INTERNATIONAL
POLITICAL


பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு



பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

தெற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஹர்னாய் பகுதியில் உள்ள சுரங்கத்துக்குத் ஊழியர்களை கொண்டு சென்ற லாரி ஒன்று தாக்கப்பட்டது.

பலுசிஸ்தான், கிளர்ச்சியாளர்கள் பலகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட்டாரமாகும்.

மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுக் கருவி ஒன்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தது. லாரி, சுரங்க ஊழியர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் சேர்த்தவுடன் குண்டு வெடித்தது,” என்று ராணுவ உதவியாளர் கூறினார்.

(colombotimes.lk)