தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது டிசம்பர் 11ம் திகதிக்குள் இலங்கை- தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை நெருங்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்கம் காரணமாக நாளை (10) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக நாடளாவிய ரீதியில் நிலைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (09) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
(colombotimes.lk)