11 July 2025

logo

தெறிக்கும் BOX OFFICE ..சாதனைகளை தொடரும் அமரன்



நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ம் திகதி  திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான அமரன் படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

கடந்த 12 நாட்களில்  250 கோடி வசூலை தாண்டியுள்ள அமரன் திரைப்படம்  திரையரங்குகளில் வசூல் சாதனை செய்துவருவதால் ஓடிடியில் வெளியாகும் திகதியும்  தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தன்னை முதல் முதலாக 100 கோடி கிளப்பில் இணைத்திருந்த சிபி சக்கரவர்த்தி மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

(colombotimes.lk)