அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்புயல் அபாயம் காரணமாக வர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிப்புயலுடன் வரும் பனிப்பொழிவு ஒரு தசாப்தத்தில் மிக அதிகமான பனிப்பொழிவாக இருக்கலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவின் பல பகுதிகள் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
(colombotimes.lk)