14 January 2025


ஏ.ஆர்.ரகுமானை பிரிவது இதனால் தான்.. மனைவி சாய்ரா பானுவின் விளக்கம்



இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக உள்ளார். இவர் தனது மனைவி சாய்ராவை 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவிப்பு வந்த பின் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பலரும் தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சாய்ரா விவாகரத்து பிரச்சனை குறித்தும் ஏ.ஆர்.ரகுமான் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சனையாக இருந்துவிட கூடாது என்றும் எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.

எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் உலகிலேயே தலைசிறந்த மனிதர் எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை' என்றும்  தெரிவித்துள்ளார்

(colombotimes.lk)