ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்தவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள், வெடிக்காத கையெறி குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கல்கிசை , தெஹிவளை மற்றும் அங்குலான பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு குற்ற நடவடிக்கையை கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்டுள்ள நிலையில்
இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
