கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று (11) இரவு அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக இந்த அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாக SriLankan Airlines தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மற்றொரு விமானத்தின் மூலம் பயணிகள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் பயணம் 5 மணிநேரத்திற்கும் அதிகமாக தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தால் எந்தப் பயணிக்கும் அல்லது விமானத்திற்கும் சேதமோ ஆபத்தோ ஏற்படவில்லை என SriLankan Airlines தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)
